ADDED : ஆக 20, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; ஒட்டன்சத்திரம் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 2.02 டன் யூரியா உர மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒட்டன்சத்திரம், அரப்பிள்ளைப்பட்டி பகுதியில் ஜூலை 16 ம் தேதி இரவு ஒரு வேன் விபத்துக்குள்ளாகி வேனிலிருந்த சரக்கு மூடைகள் சாலையில் சிதறிக் கிடந்தன. அதில் மைதா மாவு மூடைகளுக்கு இடையே யூரியா உர மூடைகளும் கிடந்ததால் அவ்வழியாக சென்ற வேளாண்மை அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அருணிடம் விசாரணை நடந்தது.
இதனையடுத்து வேனை பறிமுதல் செய்துஉரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 2.02 டன் யூரியா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம்அரசு அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.