/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
2024 கொடி நாள் வசூல் ரூ.1.47 கோடி; கலெக்டர் தகவல்
/
2024 கொடி நாள் வசூல் ரூ.1.47 கோடி; கலெக்டர் தகவல்
ADDED : டிச 08, 2024 05:16 AM
திண்டுக்கல்,: ''2024 கொடிநாளில் ரூ.1 கோடியோ 47 லட்சத்து 79 ஆயிரத்து 355 வசூல் செய்யப்பட்டதாக''கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த படைவீரர் கொடிநாள் -2024 நிதி வசூல் நிகழ்ச்சியில் தலைமை வகித்த அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 2024 கொடி நாளில் ரூ.1 கோடியோ 47 லட்சத்து 79 ஆயிரத்து 355 வசூல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னாள் ராணுவத்தினர் ,அவர்தம் குடும்பத்தினருக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார் .
நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் சுகுணா, முன்னாள் படைவீரர் நலன் அமைப்பாளர் செல்வம், முப்படைவீரர் வாரிய உபதலைவர் லெப் கர்னல் கே.சங்கர்(ஓய்வு) கலந்துகொண்டனர். 21 பயனாளிகளுக்கு ரூ.3.92 லட்சம் மதிப்பிலான உதவிகளை கலெக்டர் வழங்கினார். வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர், 2ம் உலகப்போரில் வீரமரணமடைந்த படைவீரர்களின் மனைவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 2ம் உலகப்போரில் பணியாற்றி 100 வயது கடந்த முன்னாள் படைவீரர் சுந்தரராஜன் கவுரவிக்கப்பட்டார்.