/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள்
/
21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள்
ADDED : பிப் 15, 2026 05:45 AM

ஒட்டன்சத்திரம்: ''தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளதாக '' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ரூ.2.02 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்த அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 72 ஆயிரத்து 78 புதிய ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டு உள்ளன. 3 ஆயிரத்து 256 பகுதி ,முழு நேர ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இரண்டு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
அரசின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மீண்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, நகராட்சித் தலைவர் திருமலைசாமி துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் பங்கேற்றனர்.

