நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே விட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
கன்னிவாடி கணபதி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். குஜராத்தில் பைனான்ஸ் தொழில் செய்கிறார். இரு வாரங்களுக்கு முன் கன்னிவாடி வந்தார். வங்கியில் அடகு வைத்திருந்த 22 பவுன் நகையை மீட்டு வீட்டில் வைத்திருந்தார். இரு நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் நிலக்கோட்டை அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. கன்னிவாடி போலீசார் விசாரிக்கின்றனர்.