/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருந்தாளுநர் வீட்டில் 24 பவுன் நகை திருட்டு
/
மருந்தாளுநர் வீட்டில் 24 பவுன் நகை திருட்டு
ADDED : செப் 29, 2025 02:03 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள மருந்தாளுநர் வீட்டில் 24 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் பணம் உள்ளிட்டவை திருடு போயின.
அருப்புக்கோட்டை -திருச்சுழி ரோடு ஆர்.கே.நகரில் வசிப்பவர் விஜயகுமார் 40, இவர் இங்குள்ள நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக உள்ளார். நேற்று முன் தினம் இரவு குடும்பத்துடன் சொந்த ஊரான பாலவநத்தம் சென்றார். நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கேட் பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 24 பவுன் நகைகள், 156 கிராம் வெள்ளி பொருட்கள், பணம் 13 ஆயிரத்து 200 திருடு போனது தெரிந்தது.
அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.