/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வன விலங்குகளை வேட்டையாடிய 26 பேருக்கு அபராதம்
/
வன விலங்குகளை வேட்டையாடிய 26 பேருக்கு அபராதம்
ADDED : பிப் 04, 2024 05:52 AM
வேடசந்துார் வேடசந்துார் மாரம்பாடியில் பெரிய அந்தோணியார் திருவிழாவை முடித்த ஊர் மக்கள் பாரிவேட்டைக்கு சென்ற நிலையில் ,வன விலங்குகளை வேட்டையாடியதாக 26 பேரிடம் ரூ.52 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
வேடசந்துார் அருகே மாரம்பாடி ஊராட்சி மாரம்பாடியில் பெரிய அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு வருடாந்திர திருவிழா ஜனவரி 16,17,18ல் திருவிழா நடந்தது.
மூன்றாவது சனிக்கிழமையான நேற்று ஊர் மக்கள் சார்பில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற பாரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாரம்பாடியை சேர்ந்த வன விலங்கு வேட்டை குழுவினர் வேடசந்துார் அய்யனார் கோயில் பகுதியில் வேட்டையாடினர்.
மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவில் வன பாதுகாப்பு படையினர் வேட்டையாடிய 13பேரை பிடித்து திண்டுக்கல் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு நடந்த விசாரணையில் மேலும் 13 நபர்களை வரவழைத்து பிடித்தனர். 26 பேரிடம் ரூ.52 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இனிமேல் வனவிலங்குகளை வேட்டையாடச் செல்லக்கூடாது என உறுதிமொழி பெறப்பட்டது.