/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைதீர் கூட்டத்தில் 260 பேர் முறையீடு
/
குறைதீர் கூட்டத்தில் 260 பேர் முறையீடு
ADDED : பிப் 18, 2025 05:33 AM
திண்டுக்கல்: விளாம்பட்டி ஊராட்சியோடு இணையுங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 260 பேர் மனுக்கள் வாயிலாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
21 பேருக்கு ரூ.5.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, உதவி ஆணையாளர் (கலால்) பால்பாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், செல்வன் கலந்துகொண்டனர்.
ஊராட்சியோடு இணையுங்க
நிலக்கோட்டை விளாம்பட்டியருகே உள்ள முத்துலாபுரம் பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களுக்கு எத்திலோடு ஊராட்சியில் ஓட்டுரிமை உள்ளது.
வரிகள் கட்டுவது முதல் சிறு விஷயம் என்றாலும் எத்திலோடு ஊராட்சிக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே எந்த ஒரு பலனும் இல்லாத எத்திலோடு ஊராட்சியில் இருந்து எங்களை நீக்கி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் வகையில் அருகில் உள்ள விளாம்பட்டி ஊராட்சியில் இணைக்க வேண்டும் என குறிப்பட்டுள்ளனர்.
இல்லாத தடுப்புச்சுவர்
சிவசேனா இளைஞரணி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஆத்துார், முன்னிலைக்கோட்டை, ஆரியநெல்லுாரில் இருந்து பண்ணைப்பட்டி செல்லும் ரோட்டில் பிரான்சிஸ் தோட்டம் முதல் கருப்பன் குளம் வரை ரூ.8 லட்சம் தடுப்பனை கட்டப்பட்டதாக போர்டு வைத்துள்ளனர்.
ஆனால் எவ்விதமான தடுப்புச்சுவரும் அமைக்கப்படவில்லை. ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.