தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/262 மாற்றுத் திறனாளிகள் மனு

262 மாற்றுத் திறனாளிகள் மனு

262 மாற்றுத் திறனாளிகள் மனு


UPDATED : நவ 12, 2026 12:12 AM

ADDED : நவ 12, 2026 12:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:12 AM ADDED : நவ 12, 2026 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது.

கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பதிவு, உதவி உபகரணங்கள், வங்கிக் கடனுதவி, வேலைவாய்ப்பு பயிற்சி, பராமரிப்பு உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 262 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து ஊன்றுகோல், மடக்கு குச்சி, மடக்கு சக்கர நாற்காலி என பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் ஹென்றிபீட்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயந்தி, பயிற்சி கலெக்டர் திவ்யலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us