/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடையை மீறி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் மாவட்டம் முழுவதும் 288 பேர் கைது
/
தடையை மீறி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் மாவட்டம் முழுவதும் 288 பேர் கைது
தடையை மீறி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் மாவட்டம் முழுவதும் 288 பேர் கைது
தடையை மீறி ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம் மாவட்டம் முழுவதும் 288 பேர் கைது
ADDED : டிச 08, 2025 06:17 AM

திண்டுக்கல்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரியும் திண்டுக்கல்லில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினர் 288 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், தீபம் ஏற்றவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என சுட்டிக்காட்டி 144 தடை பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.
இதற்கு, பா.ஜ., ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் மணிக்கூண்டு அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் ராஜா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மாரிமுத்து, செயலாளர்கள் செந்தில்வேல், சஞ்சவீராஜ் முன்னிலை வகித்தனர். போலீஸ் தரப்பில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 38 பெண்கள் உள்பட ஹிந்து முன்னணியினர் 100 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
கன்னிவாடி: மேற்கு மாவட்ட செயலாளர் தினகரன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
பழநி--: மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டான அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் பாலன், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில பொறுப்பாளர் சுவாமிநாதன், பா.ஜ., பழநி சட்டசபை பொறுப்பாளர் கனகராஜ் மற்றும் ஹிந்து அமைப்பினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 288 பேர் கைது செய்யப் பட்டனர்.

