/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல்
/
ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல்
ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல்
ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல்
ADDED : டிச 08, 2025 06:17 AM
ஒட்டன்சத்திரம்: ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்திலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ரயிலில் கூட்டம் அலைமோதும். முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக்கிங் செய்யப்பட்டு விடுகிறது. காத்திருப்போர் பட்டியல் நூறு, இருநூறுக்கு மேல் சென்று விடுகிறது. இவர்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது அரிதாகி வருகிறது. பஸ் கட்டணத்தை விட ரயில்வே கட்டணம் குறைவாகவும் ரயிலில் பயணிப்பது வசதியாகவும் இருப்பதால் நடுத்தர மக்களின் முதல் வாய்ப்பாக ரயில் பயணம் உள்ளது. இதனால்தான் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். ரயில்வே நிர்வாகம் பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கினாலும் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் தீர்ந்து விடுகிறது. இதனால் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில் ரயில் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் ரயில்களில் பொதுப் பெட்டிகள் மற்றும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

