ADDED : அக் 21, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் மன்னார்கோட்டை கல்குவாரியில் காவலாளியாக வேலை பார்த்தவர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த ரவி 54. இவர் இரு நாட்களுக்கு முன் முகத்தில் காயங்களுடன் காட்டுக்குள் இறந்து கிடந்தார். வேடசந்துார் டி.எஸ்.பி., இலக்கியா தலைமையில் தனிப்படை போலீசார் கரட்டுப்பட்டி காலனியை சேர்ந்த நவீன் 30, பாண்டி 25, நவநீதன் 19, ஆகிய 3 பேரை பிடித்து வேடசந்துார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் நவீனிடம், ரவி பணத்தை கடனாக வாங்கிவிட்டு கொடுக்காமல், 3 பேரையும் திட்டினார். ஆத்திரமடைந்த 3 பேரும் மதுபோதையில் அதிகாலை 3:00 மணிக்கு கல்குவாரிக்கு வந்து அங்கிருந்த ரவியை,கற்களால் தாக்கி கொலை செய்தது தெரிந்தது. வேடசந்துார் போலீசார் 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.