/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகை திருடிய 3 பேர் சிக்கினர்
/
நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகை திருடிய 3 பேர் சிக்கினர்
நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகை திருடிய 3 பேர் சிக்கினர்
நகைக்கடையில் ரூ.1.43 கோடி நகை திருடிய 3 பேர் சிக்கினர்
ADDED : டிச 30, 2025 06:27 AM

திண்டுக்கல்: நகைக்கடையில், 1.43 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடிய ஊழியர்கள் மூவரை, போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வரதராஜ் காம்ப்ளக்சில் செயல்படும் நகைக்கடையில், திண்டுக்கல்லை சேர்ந்த ரேணுகேசன், 62, துணை பொது மேலாளராக உள்ளார்.
கடந்த டிச., 2ல் தரைத்தளத்தில் நெக்லஸ் பிரிவில், தங்க நகைகளை தணிக்கை செய்ததில், 1.5 கிலோ எடை கொண்ட, 45 தங்க நெக்லஸ்கள் மாயமானது தெரிந்தது. அதன் மதிப்பு ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய்.
ஊழியர்களிடம் ரேணுகேசன் நடத்திய விசாரணையில், தரைத்தளத்தின் மேலாளர் பாலசுப்பிரமணியன் விடுமுறையில் இருந்த போது, பொறுப்பு மேலாளராக இருந்த சிவா, 29, அதே தளத்தில் பணியில் இருந்த காசாளர் கார்த்திகேயன், 43, விற்பனையாளர் விநாயகன், 36, ஆகியோர், வாடிக்கையாளர்களுக்கு மாடல் காண்பிப்பதாக கூறி, நகைகளை எடுத்தது தெரிந்தது.
இதற்கு, காசாளர்கள் பாண்டியன், சரவணக்குமார், கார்த்திக், நகை மதிப்பீட்டாளர் செல்வராஜ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டு, விற்று பணத்தை பங்கு போட்டதும் தெரிந்தது.
புகாரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து சிவா, கார்த்திகேயன், விநாயகன் ஆகிய மூவரை கைது செய்தனர். நான்கு ஊழியர்களை தேடுகின்றனர். 80 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகளை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

