/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குஜிலியம்பாறை கரட்டுப்பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை; 8 பேர் கைது; 62 டூவீலர்கள், 7 சேவல்கள் பறிமுதல்

ADDED : டிச 29, 2025 06:47 AM
குஜிலியம்பாறை: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை இலுப்பப்பட்டி கரட்டு பகுதியில் அனுமதியின்றி பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 62 டூவீலர்கள், ரூ.1.27 லட்சம், 7 சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாளையம் பேரூராட்சி இலுப்பப்பட்டி கரூர் மாவட்ட எல்லை பகுதியில் பணம் வைத்து பெரிய அளவில் சேவல் சண்டைகள் நடப்பதாகவும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்பதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் டி.எஸ்.பி., பவித்ராவுக்கு தகவல் சென்றது.
டி.எஸ்.பி., உத்தரவின்படி அங்கு சென்ற போலீசார் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களில் பலர் தப்பி ஓடினர். இருப்பினும் குஜிலியம்பாறை பேர்நாயக்கன்பட்டி கவிக்குமார் 26, கரூர் அரவக்குறிச்சி ரங்கசாமி 40, கரூர் பாலசுப்பிரமணி 45, பாளையம் இலுப்பப்பட்டி தங்கராஜ் 60, கரூர் வெள்ளியணை பாலமுருகன் 32, திருச்சி இரட்டை வாய்க்கால் செல்வகுமார் 47, ஈரோடு குளத்துப்பாளையம் கோபால் 32, குஜிலியம்பாறை துரைசாமி 55, ஆகியோரை கைது செய்தனர். மேலும் சீட்டாட்டமும் நடந்தது தெரிந்தது. அந்த இடத்தில் இருந்து 62 டூவீலர்கள், 8 சேவல்கள், ரூ. ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 980 ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.