/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒரே நாளில் பழநி பஞ்சாமிர்தம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை
/
ஒரே நாளில் பழநி பஞ்சாமிர்தம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை
ஒரே நாளில் பழநி பஞ்சாமிர்தம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை
ஒரே நாளில் பழநி பஞ்சாமிர்தம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை
ADDED : டிச 29, 2025 06:28 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தொடர் விடுமுறையால் பக்தர்கள் வருகை அதிகரித்ததால் ஒரே நாளில் பஞ்சாமிர்தம் ரூ.75 லட்சத்துக்கு விற்கப்பட்டது.
இக்கோயிலில் தற்போது ஐயப்ப, தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரித்துள்ளது. டிச., 26 ஒரே நாளில் ரூ.75 லட்சத்து 53 ஆயிரத்து 780க்கு விற்பனையாகியுள்ளது.
2022 ஏப்., 23ல் துவங்கப்பட்ட நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் தொன்னையில் 40 கிராம் பஞ்சாமிர்தம் இலவச பிரசாதம் தினமும் 8643 பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பிரசாதம் ரூ.7 லட்சம் மதிப்பிலான தானியங்கி இயந்திரம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. டிச., 26 வரை ஒரு கோடியே 18 லட்சத்து 40 ஆயிரத்து 910 பக்தர்கள் இதில் பயன் அடைந்துள்ளனர் என கோயில் நிர்வா கம் தெரிவித்துள்ளது.