/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பத்திர அலுவலக அவதிக்கு ஒரே நாளில் 3 போஸ்டர்கள்
/
பத்திர அலுவலக அவதிக்கு ஒரே நாளில் 3 போஸ்டர்கள்
ADDED : டிச 21, 2024 05:21 AM

வடமதுரை : வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி நேற்று ஒரே நாளில் 3 வித போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளன.
வடமதுரை பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு 13 ஆண்டுகளாக நிரந்தர சார் பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் பதவி அளவிலானவர்களே மாற்று பணியாக வருகின்றனர்.
மேனுவல் வில்லங்க சான்று வழங்க மனு வாங்க மறுப்பது, இன்டெக்ஸ் திருத்தம் சரி செய்யாதது, நில மதிப்பு நிர்ணயம் செய்ய அதிக காலதாமதம் செய்வது, பணியாளர்கள் தாமதமாக பணிக்கு வருவது என பல பிரச்னைகள் இங்குள்ளன.
கம்பிளியம்பட்டி பகுதி கோவிந்தராஜ் பெயரில் ஒட்டிய போஸ்டரில் அவரது தந்தை காசிராம் 2021 நவம்பரில் மேனுவல் வில்லங்கம் கேட்டிருந்த நிலையில் வழங்கப்படவில்லை என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் சக்தி இயக்கம், பா.ஜ., சார்பில் ஒட்டப்பட்டுள்ள மற்ற போஸ்டர்களில் இதற்காக விரைவில் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
நிரந்தர அதிகாரி இல்லாததால் சிக்கல் மிகுந்த விஷயங்களில் சரியான முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் விடப்படுவதால் அதனை சார்ந்தவர்கள் மாதக்கணக்கில் அலையும் நிலை உள்ளது.
இங்கு நிரந்தர சார்பதிவாளர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

