UPDATED : அக் 16, 2026 10:50 PM
ADDED : அக் 16, 2026 10:46 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் நாயக்கர் புதுத்தெரு வெங்காய வியாபாரி அசோக்குமார் 28. இவரது வீட்டில் சில நாட்களுக்கு முன் 3 பவுன் தங்கச்செயின் திருடு போனது. இது குறித்து நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., கார்த்திக் உத்தரவில் எஸ்.ஐ., நாராயணன், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அசோக்குமாரிடம் வேலை பார்த்த ஆர்.எம்., காலனியை சேர்ந்த வினோத் 19, 17 வயது சிறுமி ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நகையை மீட்டு விசாரிக்கின்றனர்.
