ADDED : ஆக 16, 2025 02:16 AM
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலை கிராமம் கண்ணனுார் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மூன்று ஆடுகள் இறந்தன.
ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லையில் உள்ள வடகாடு ஊராட்சி கண்ணனுார் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அங்கு கட்டி இருந்த மூன்று ஆடுகள் சிறுத்தை தாக்கி பலியாகின. விருப்பாச்சி கால்நடை மருத்துவமனை டாக்டர் நவீன் பிரேத பரிசோதனை செய்தார். ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா தலைமையிலான வனத்துறையினர் பட்டாசு வெடித்து சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
சமீப நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீடு தோட்டங்களில் வளர்த்து வரும் நாய், கோழி, ஆடுகளை தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.