/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மீனவர் வலையில் சிக்கிய 3 டன் திருக்கை மீன்கள்; ரூ.3.30 லட்சத்திற்கு விற்பனை

ADDED : டிச 11, 2025 05:24 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் 3 டன் திருக்கை மீன்கள் சிக்கின. இவை ரூ. 3.30 லட்சத்திற்கு விற்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாம்பனில் இருந்து டிச., 9ல் 90 விசைப்படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று நேற்று காலை கரை திரும்பினர். இதில் ஒரு விசைப்படகில் ருசியான திருக்கை மீன்கள் 3 டன் சிக்கியது. இந்த மீனுக்கு கோவை, பொள்ளாச்சி, மதுரை மற்றும் கேரள மீன் மார்க்கெட்டுகளில் மவுசு அதிகம் என்பதால் கிலோ ரூ.110க்கு பாம்பன் வியாபாரி ஒருவர் வாங்கினார்.
இதனை ஐஸ்சில் பதப்படுத்தி லாரியில் கோவை, கேரளாவுக்கு அனுப்பினர். ஒரே படகில் திருக்கை மீன்கள் ரூ.3.30 லட்சத்திற்கு விற்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.