/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பஸ்கள்
/
திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பஸ்கள்
ADDED : நவ 14, 2024 07:07 AM
திண்டுக்கல்; பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல்லிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் வகையில் நவ.14 முதல் 30 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிகின்றனர். திண்டுக்கல்லிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்லும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நவ.14 முதல் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்காக தனி போக்குவரத்து அதிகாரிகளும் பணியில் ஈடுபட உள்ளனர். நவ.17ல் முகூர்த்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் டூ சென்னைக்கு சிறப்பு பஸ்களும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் சசிக்குமார் தெரிவித்தார்.