/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
3000 ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் சக்கரபாணி
/
3000 ரேஷன் கடைகள் பிரிப்பு: அமைச்சர் சக்கரபாணி
ADDED : ஜூன் 28, 2025 11:44 PM

ஒட்டன்சத்திரம்: ''தமிழ்நாட்டில் இதுவரை 3000 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் வடகாடு ஊராட்சியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளையை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் உணவுத்துறை மூலம் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது வரை 20 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3000 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 290 ரேஷன் கடைகளும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 100 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி, முழு நேர கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதுஎன்றார்.
தாசில்தார் சஞ்சய் காந்தி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே. பாலு, துணைச் செயலாளர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் தனலட்சுமி, முன்னாள் துணைத் தலைவர் பிரபாவதி கலந்து கொண்டனர்.