/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு எஸ்.ஐ., உட்பட 34 பேர் காயம்
/
புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு எஸ்.ஐ., உட்பட 34 பேர் காயம்
புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு எஸ்.ஐ., உட்பட 34 பேர் காயம்
புகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு எஸ்.ஐ., உட்பட 34 பேர் காயம்
ADDED : பிப் 20, 2025 05:45 AM
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், செபஸ்தியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 34 பேர் காயமடைந்தனர்.
சாணார்பட்டி புகையிலைப்பட்டி புனித சந்தியாகப்பர்,செபஸ்தியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.அதன்படி இந்தாண்டு ஜல்லிக்கட்டு புகையிலைப்பட்டி மந்தையில் நடந்தது. 786 காளைகள், 316 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இதை ஆர்.டி.ஓ., சக்திவேல் தொடங்கி வைத்தார்.
இலங்கை அமைச்சர் தொண்டைமான் காளை, காட்டு ராஜா, கருப்பன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறி பாய்ந்தது . மாடு பிடி வீரர்கள், போலீஸ் எஸ்.ஐ., உட்பட 34 பேர் காயமடைந்தனர். பிடிபடாத மாடுகள், காளைகளை பிடித்த வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.