/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரத்தில் அரசு பஸ் மோதி 35 பயணியர் படுகாயம்
/
மரத்தில் அரசு பஸ் மோதி 35 பயணியர் படுகாயம்
ADDED : அக் 26, 2024 07:06 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், செந்துறை- கோட்டைப்பட்டியில் இருந்து அரசு டவுன் பஸ், நத்தம் நோக்கி வந்தது. கோபால்பட்டியைச் சேர்ந்த மோகன், 52, என்பவர் ஓட்டினார். நத்தம் அருகே புதுப்பட்டி பகுதியில், எதிரே வந்த டூ - வீலர் மீது மோதாமல் இருக்க, பஸ்சை டிரைவர் திருப்பினார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர மரத்தில் மோதியது. இதில், டிரைவர் இடிபாடுகளில் சிக்கினார். நத்தம் தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் இணைந்து, டிரைவரை மீட்டனர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதுபோல, 20 முதல், 60 வயது வரையிலான, 35-க்கும் மேற்பட்ட பயணியர் படுகாயமடைந்தனர். அவர்கள் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.