/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
4வழிச்சாலை விபத்து: இன்ஜினியர் பலி
/
4வழிச்சாலை விபத்து: இன்ஜினியர் பலி
ADDED : ஜூலை 13, 2011 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர் : பெங்களூரு மாதஹல்லியில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தவர் ஜெயன் (39).
நேற்று, ஸ்விப்ட் காரில் பெங்களூருவில் இருந்து திண்டுக்கலுக்கு வந்தார். காரை அவரே ஓட்டினார். காலை 10 மணிக்கு, காக்காத்தோப்பு - வேடசந்தூர் பிரிவு அருகே எதிரே வந்த லாரி மோதியது. காரின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது. உடல் நசுங்கி ஜெயன் இறந்தார். நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் ரோட்டிற்கு இணைப்பு இல்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. வேடசந்தூருக்கு வரும் இரண்டு ரோடுகளிலும் இணைப்பு சாலை அமைத்தால் விபத்தை தவிர்க்கலாம்.

