/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எறும்பு தின்னியை வேட்டையாடி ஓடுகளை விற்க முயன்ற 4 பேர் கைது
/
எறும்பு தின்னியை வேட்டையாடி ஓடுகளை விற்க முயன்ற 4 பேர் கைது
எறும்பு தின்னியை வேட்டையாடி ஓடுகளை விற்க முயன்ற 4 பேர் கைது
எறும்பு தின்னியை வேட்டையாடி ஓடுகளை விற்க முயன்ற 4 பேர் கைது
ADDED : ஜூன் 19, 2025 10:39 PM

நெய்க்காரப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே எறும்பு தின்னியை வேட்டையாடி அதன் ஓடுகளை விற்க முயன்ற நால்வரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பழநி நெய்க்காரப்பட்டி அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் கொழுமம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஆண்டிபட்டி நரிப்பாறையை சேர்ந்த முத்து 57, குதிரை அணைப்பகுதியை சேர்ந்த ராமசாமி 56, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கல்லாபுரத்தை சேர்ந்த நாகராஜ் 49, திருவள்ளுவர் மாவட்டம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பாஸ்கரன் 59 ,ஆகியோர் எறும்பு தின்னி ஓடுகளுடன் நின்றனர் . இவர்களை பிடித்து விசாரித்ததில் எறும்பு தின்னியை வேட்டையாடி அதன் ஓடுகளை விற்க முயற்சி செய்தது தெரிந்தது. நால்வரும் கைது செய்யப்பட்டனர்.