UPDATED : செப் 02, 2026 06:09 PM
ADDED : செப் 02, 2026 06:03 PM
வடமதுரை:வடமதுரை அருகே கொல்லப்பட்டி பகுதியில் பால் வேன் மோதி 4 குழந்தைகள் இறந்த சம்பவத்தையடுத்து வாகன சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேடசந்துார் வட்டார வாகன ஆய்வாளர் செல்வம், வடமதுரை போலீசார் இணைந்து நடத்திய வாகன சோதனை, ஆய்வில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு மினிசரக்கு வாகனம், காப்பீடு, தகுதிச்சான்று இல்லாமல் இயங்கிய ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. டூவீலர்கள் தணிக்கையில் ெஹல்மெட் அணியாமை, ஓட்டுநர் உரிமம் இல்லாமை என 12 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் கூறுகையில், 'வாகன ஓட்டிகள் முறையாக ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஓட்டுநர் உரிமம், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
