UPDATED : செப் 02, 2026 06:49 PM
ADDED : செப் 02, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
நத்தம்:நத்தம்- கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி கொண்டாட்டத்தின் நிகழ்வாக பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளியில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது. பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பசுமைப்படை மாணவர்கள் பங்கேற்றனர்.
