ADDED : செப் 02, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், செப்.3
வேடசந்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் டிராவல்ஸ், போட்டோ ஸ்டுடியோ, பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் டிரைவர்கள் எந்த காரணத்தை கொண்டும் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கக் கூடாது. அச்சக உரிமையாளர்களிடம் போஸ்டர், நோட்டீஸ் அச்சடிக்க கொடுத்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் காண்பித்து அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் வேடசந்துார் கணேசமூர்த்தி, எரியோடு வினோதா, வடமதுரை நிதிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
