UPDATED : செப் 02, 2026 05:20 PM
ADDED : செப் 02, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் நாகமலை 50, கூலித்தொழிலாளி.
நேற்று மதியம் இவரது வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. குடிசை தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே இருந்த பொருட்கள், வீட்டின் அருகில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர், பக்கத்து வீட்டை சேர்ந்தவரின் ஸ்கூட்டர் ஆகியன தீயில் கருகியது. அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
