/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனத்துறையினர் 4 பேர் 'சஸ்பெண்ட்'
/
வனத்துறையினர் 4 பேர் 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 11, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறை காப்புகாட்டில் சீகை மரங்கள் வெட்டியதை கண்காணிக்க தவறிய வனத்துறையினர் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கொடைக்கானல் மன்னவனுார் காப்புக்காட்டில் ஏராளமான சீகை மரங்களை சிலர் வெட்டிக் கடத்தி உள்ளனர். மரங்கள் வெட்டியதை கண்காணிக்க தவறிய மன்னவனுார் ரேஞ்சர் திருநிறைசெல்வன், வனவர்கள் அம்ச கணபதி, சுபாஷ், வனக்காப்பாளர் வெங்கட்ராமன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து வனத்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மரம் வெட்டியது குறித்து விசாரிக்கின்றனர்.

