ADDED : ஜன 20, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு : வேலாம்பட்டி தீத்தாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்புச்சாமி 42.
பூர்வீக நிலத்தை பிரிப்பது சம்பந்தமாக நேற்று முன்தினம் இரவு அங்குள்ள மைதானத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது ஏற்பட்ட தகராறில்
கருப்புச்சாமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் கருப்புச்சாமியின் உறவினர்களான வெள்ளைச்சாமி 57, அவரது மனைவி தங்கம் 55, முனியப்பன் 35, சாரதி 30, ஆகியோரை எரியோடு போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான கார்த்தி, சூர்யாவை தேடுகின்றனர்.