/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் நாய் கண்காட்சி 40 வகை நாய்கள் பங்கேற்பு
/
'கொடை' யில் நாய் கண்காட்சி 40 வகை நாய்கள் பங்கேற்பு
'கொடை' யில் நாய் கண்காட்சி 40 வகை நாய்கள் பங்கேற்பு
'கொடை' யில் நாய் கண்காட்சி 40 வகை நாய்கள் பங்கேற்பு
ADDED : ஆக 31, 2025 07:05 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தனியார் பள்ளியில் மெட்ராஸ் கெனனைன் கிளப், கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் சார்பில் சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி நேற்று துவங்கியது.
இதில் 355 நாய்கள் கலந்து கொண்டன. முடிவுகளை அறிவிக்க வெளிநாட்டு நடுவர்கள் கலந்து கொண்டனர்.
சாம்பியன் ஷிப் கண்காட்சியில் பாக்சர், ஆப்ரிக்கன் புல்டாக், டோபர் மேன், கிரே டேன் , பூடல், பீகில், கோல்டன் ரெட்ரீவர், சைபீரியன் கஸ்கி, ஜெர்மன் செப்பேர்டு, ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கேரவன் கவுன்ட் உள்ளிட்ட 40 வகை நாய்கள் பங்கேற்றன. மழையையும் பொருட்படுத்தாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இன்று நாய் கண்காட்சி நிறைவடைகிறது.