/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரவு முழுவதும் காத்திருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்
/
இரவு முழுவதும் காத்திருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்
இரவு முழுவதும் காத்திருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்
இரவு முழுவதும் காத்திருந்து 400 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : மே 31, 2024 02:41 AM

திண்டுக்கல்:பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி வந்து செம்பட்டி கோடவுனில் பதுக்கிய 400 கிலோ குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இரவு முழுவதும் காத்திருந்து பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களிலிருந்து டன் கணக்கில் குட்கா பொருட்கள் கடத்தி வந்து சில்லறை விற்பனை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. மாவட்ட நிர்வாகம் உத்தரவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்,போலீசாருடன்
இணைந்து மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். சில்லறை விற்பனையாக கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பொருட்களை அவ்வப்போது பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பெங்களூருவிலிருந்த கடத்தி வந்து செம்பட்டி அருகே உள்ள ஒரு கோடவுனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவரை கையும் களவுமாக பிடிக்க நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்ட
உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி,பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம்,ஜோதிமணி,முருகன்,ஜாபர்சாதிக் உள்ளிட்ட அதிகாரிகள்
செம்பட்டி ஜே.புதுக்கோட்டை பகுதிக்கு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரை இவர்கள்கண்காணித்து கொண்டே இருந்தனர்.
இரவு முழுவதும் காத்திருந்த அதிகாரிகள் நேற்று அதிகாலையில் அந்த நபர் ஜே.புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கோடவுனுக்கு சென்று சில்லறை விற்பனைக்காக மூடைகளிலிருந்த குட்காவை பிரித்து கொண்டிருந்தார்.அப்போது அதிகாரிகள் அவரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பினார். பின் அங்கிருந்த 400 கிலோ குட்கா பொருட்களை அதிகாரிகள்
பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.