ADDED : பிப் 01, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அரசுப் பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறும் தலா 500 மாணவ, மாணவிகள் என ஆயிரம் பேருக்கு ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அரசு வழங்குகிறது.
இந்த தேர்வுக்கான அறிவிப்பு டிச.17ல் வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் 4 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல், பழநி கல்வி மாவட்டங்களில் 19 மையங்களில் முதல்வர் திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது.
காலை, மதியம் என 2 கட்டங்களாக நடந்த தேர்வை மொத்தம் 4123 மாணவர்கள் எழுதினர். 483 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
