/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் பஸ்சில் கடத்தி வந்த 47 கிலோ குட்கா பறிமுதல்
/
திண்டுக்கல்லில் பஸ்சில் கடத்தி வந்த 47 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல்லில் பஸ்சில் கடத்தி வந்த 47 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல்லில் பஸ்சில் கடத்தி வந்த 47 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 31, 2025 03:22 AM
திண்டுக்கல், : பெங்களுருவில் இருந்து திருநெல்வேலி கொண்டு செல்ல பஸ்சில் கடத்திவந்த 47 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்களை திண்டுக்கல் போலீசார் கைப்பற்றி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இரண்டு சாக்குமூடைகள், கருப்பு நிற பேக்கை வைத்துக்கொண்டு இளைஞர் நிற்பதை போலீசார் கவனித்தனர். விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த திம்மராஜபுரத்தை சேர்ந்த வியாபாரிஆறுமுகம் 25, என்பது தெரிந்தது.
சாக்குமூடையை சோதனை செய்ததில் தடை குட்கா, பான் மசாலா பொருட்கள் இருந்ததும், பெங்களுருவிலிருந்து கடத்திவந்தது தெரியவந்தது. 47.475 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஆறுமுகத்தை திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.