/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
5 ஆண்டுகளில் 479 குளங்கள் புனரமைப்பு; ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

ADDED : நவ 23, 2024 05:44 AM
திண்டுக்கல்; '' திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆண்டுகளில் 479 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக,'' கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடந்த சிறு பாசன குளங்கள் புனரமைத்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் 1056 சிறு பாசன குளங்கள் உள்ளன. நடப்பாண்டில் அரசு நிதியின் கீழ் 252 சிறு பாசன குளங்கள் புனரமைக்கப்பட உள்ளன.
5 ஆண்டுகளில் பல்பேறு திட்டங்கள் மூலம் 479 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டன. இவை தவிர பெருநிறுவனங்களின் நிதியிலிருந்து 20 சிறுபாசன குளங்களில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
சிறு பாசன குளங்களை சீரமைக்க நமக்குநாமே திட்டம் மூலம் மதிப்பீட்டுதொகையில் 50 சதவீதம் பங்குத்தொகை செலுத்தி பணிகள் மேற்கொள்ளலாம். அரசு நிதியின் மூலம் புனரமைக்கப்படும் சிறு பாசன குளத்திற்கு பொதுமக்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயனர் குழுவினர் மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் பங்குத் தொகையாக செலுத்தி தங்களது பங்களிப்பை உறுதி செய்யப்பட வேண்டும். நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்திடவும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றார்.
திட்ட இயக்குநர் திலவதி, உதவித் திட்ட அலுவலர் முத்துப்பாண்டி, தாசில்தார்கள், விவசாயிகள் , அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்