ADDED : அக் 06, 2025 05:59 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, டூவிலர், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் பொன்மாந்துறை பகுதியில், தாலுகா போலீசார், வாகன சோதனை செய்தனர். அப்போது, கார், டூவீலர்களில் அங்கு நின்ற குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த முகமது அலிஜின்னா 30, பாதாள காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் 25, குட்டத்துப்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் 37, கோபால் நகரை சேர்ந்த ஜெகத்ரட்சகன் 27, அனுமந்த நகரை சேர்ந்த விஷ்வா 23 விசாரித்ததில், அவர்கள் கஞ்சா விற்பனைக்கு கூடியிருந்தது தெரிந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார் 200 கிராம் கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய கார், 2 டூவீலர் பறிமுதல் செய்தனர். இதில், முகமது அலிஜின்னா, ரஞ்சித்குமார், ஜெகத்ரட்சகன் 3பேர் மீதும் கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது.