ADDED : ஜூன் 02, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டியில் வசிக்கும் ரெங்கசாமிக்கு 47, சொந்தமான தோட்டம் பித்தளைப்பட்டியில் உள்ளது. இதே பகுதியை சேர்ந்த மெம்மேலி 53, பட்டி அமைத்து 200 ஆடுகளை பராமரித்தார்.
நேற்று முன்தினம் மெம்மேலி மகன் சிரஞ்சீவி 23, உறவினர் ராமலிங்கம் 50, ஒரு மாடு, ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றனர். மாலையில் மழை பெய்ததால் அங்கு வாழைத்தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து ஒரு மாடு, 4 ஆடுகள் பலியாகின.
