/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடை புகையிலை விற்ற 5 கடைகளுக்கு சீல்
/
தடை புகையிலை விற்ற 5 கடைகளுக்கு சீல்
ADDED : ஜூன் 26, 2025 01:43 AM
பழநி: பழநி பகுதிகளில் தடை குட்கா விற்பனை செய்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து ஐந்து கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைத்தனர்.
பழநி பகுதி பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா , புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன கலைவாணி தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஐந்து கடைகளில் தடை புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது.
மூன்று கடைகளுக்கு தலா ரூ. 25,000, இரு கடைகளுக்கு தலா ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஐந்து கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பழநி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.