/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : ஜூலை 28, 2025 03:21 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே கால்நடை தீவனம் தயாரிக்கவும், வடமாநிலத்தவருக்கு அதிக விலைக்கு விற்பதற்கும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5.500 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் செட்டியநாயக்கன்பட்டி அருகே ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றத்தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் சென்றது.
இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.ஐ., ராதா மற்றும் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டை சோதனையிட்டனர். வீடு முன் நின்ற காரில் 50 கிலோ பைகளாக 12 மூடைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
வீட்டினுள் உள்ள ஒரு அறையில் 50 கிலோ பைகளாக 98 மூடைகளில் 4 ஆயிரத்து 900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப் பட்டிருந்தது.
இவற்றை கடத்தயிருந்ததும் தெரிய வந்தது. 110 மூடைகளில் இருந்த 5.500 டன் ரேஷன் அரிசி, கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்தனர்.
கார் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் வெங்கட் ராமனுக்கு 30, சொந்தமானது என்பதும், தற்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் மருதாணிக்குளத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இவரும் சிலுவத்துார் சங்கிலிதேவனுாரைச் சேர்ந்த ராமகிருஷ்ணனும் 19, சேர்ந்து திண்டுக்கல், சின்னாளப்பட்டி, மருதாணிக்குளம், செட்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கிவைத்து கடத்தயிருந்தது தெரிய வந்தது.
இந்த அரிசியை கால்நடை தீவனம் தயாரிக்கவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வடமாநிலத்தவர்களுக்கும் அதிக விலைக்கு விற்கவும் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.