/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடுவனுார் கோயில் விழாவில் 50 ஆடுகள் வெட்டி விருந்து
/
நடுவனுார் கோயில் விழாவில் 50 ஆடுகள் வெட்டி விருந்து
நடுவனுார் கோயில் விழாவில் 50 ஆடுகள் வெட்டி விருந்து
நடுவனுார் கோயில் விழாவில் 50 ஆடுகள் வெட்டி விருந்து
ADDED : ஆக 14, 2025 02:43 AM
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடுவனுார் கருப்பண்ணசுவாமி கோயில் விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 50 ஆடுகள் வெட்டி கறி விருந்து நடந்தது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஆடிப்படையல் விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டபட்டது. 40 சிப்பம் அரிசியை கொண்டு 15 -க்கு மேற்பட்ட அண்டாக்களில் சமையல் செய்து சுவாமிக்கு படையல் போடப்பட்டது .நேற்று அதிகாலை 1:00 மணிக்கு கறிக்குழம்பு,உருண்டை சாதத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.