ADDED : ஜூன் 30, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சித்துாரை சேர்ந்தவர் பழனிக்குமார் 39. எல்.இ.டி., லைட், டெக்கரேசன் பொருட்கள் வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். நேற்று முன் தினம் குடும்பத்தினருடன் கோயம்புத்துார் சென்றுவிட்டு நேற்று திரும்பி வந்தபோது, வீட்டின் மொட்டை மாடி பின்புற கதவு திறந்து கிடந்தது.
மாடி வழியே வீட்டினுள் நுழைந்த கொள்ளையர் பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.