/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆசிரியர் தகுதி தேர்வு 514 பேர் ஆப்சென்ட்
/
ஆசிரியர் தகுதி தேர்வு 514 பேர் ஆப்சென்ட்
ADDED : நவ 16, 2025 04:07 AM
திண்டுக்கல்: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்த அனைவருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 490 பேர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 11 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 976 பேர் தேர்வு எழுதினர். 514 பேர் ஆப்சென்ட் ஆகினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடக்கிறது.
இதனை 10 ஆயிரத்து 934 பேர் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

