ADDED : பிப் 23, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : காலநிலை, மழை அளவை துல்லியமாக கண்காணிக்க ஏதுவாக தேவையான இடங்களில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தானியங்கி மழைமானிகள் , தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டுவருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 54 தானியங்கி மழைமானிகள் ,6 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக நத்தம், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தானியங்கி மழைமானிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் அமைக்கும் பணி நடைபெற உள்ளன.