UPDATED : நவ 20, 2026 09:30 PM
ADDED : நவ 20, 2026 09:30 PM
அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி:
பழநி பெத்தநாயக்கன்பட்டி தனியார் மில் பின்புறம் அக்.,21ல் ஒடிசா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பழநி நாகூர் பிரிவை சேர்ந்த ஹில்சன் 20, சின்னகலையம்புத்துார் தர்ஷன் 20, ஜான்சன் 20, திண்டுக்கல் சீலப்பாடி வினோத்குமார் 29, பேகம்பூர் சுனில்சூர்யா 21, மேட்டுப்பட்டி தளபதி 25, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் இவர்கள் 6 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் துர்கா உத்தரவிட்டார். தொடர்ந்து ஹில்சன் உட்பட 6 பேரும் குண்டர் சட்டத்தில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
