UPDATED : நவ 20, 2026 09:16 PM
ADDED : நவ 20, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமை வகித்தார். ஆர்.ஐ., சண்முகபிரியன், தேர்தல் பிரிவு ஆர்.ஐ., பார்த்திபன், வி.ஏ.ஓ., சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நத்தம் பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய பேரணி மூன்றுலாந்தர், அவுட்டர் வரை சென்று மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. பின் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கபட்டது. வருவாய் துறையினர், போலீசார், மாணவர்கள் பங்கேற்றனர்.
