UPDATED : நவ 20, 2026 09:16 PM
ADDED : நவ 20, 2026 09:16 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:
வேடசந்துார் அய்யர்மடம் நெடுஞ்சாலையில் டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர் – திண்டுக்கல் நோக்கி வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 11 பெட்டிகளில் 323 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. லாரியுடன் 323 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் ஈரோடு குமாரபாளையம் சுரேஷ் 36, கைது செய்யப்பட்டார். குட்காவை அனுப்பிய கோவை அன்னுார் பொன்ராஜை 42, தேடி வருகின்றனர்.
