UPDATED : ஜூலை 20, 2026 10:09 PM
ADDED : ஜூலை 20, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
பழநி:திண்டுக்கல் மாவட்ட வேளாண் இயக்குனர் கோவிந்தராசு, உதவி இயக்குனர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் பழநி பாலசமுத்திரம், பாப்பம்பட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது விதிமீறலில் ஈடுபட்டதாக பாப்பம்பட்டியில் 4, கணக்கன்பட்டியில் 2 என மொத்தம் 6 கடைகளுக்கு 21 நாட்கள் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் விற்பனை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என உரக்கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
