UPDATED : நவ 18, 2026 05:55 PM
ADDED : நவ 18, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
வடமதுரை சிக்காளிபட்டி பாலாஜி நகர் தெய்வேந்திரன் 50. இவர் தனது வீட்டின் முன் பகுதியில் ஓடையை மண் போட்டு மூடி பயன்படுத்தி வந்தார். அப்பகுதியினர் புகார் செய்ததால் பேரூராட்சி நிர்வாகம் மண்ணை அகற்றி வாய்க்காலை மீட்டனர். ஆத்திரமடைந்த தெய்வேந்திரன், அவரது குடும்பத்தினர் புகார் செய்தவர்களுடன் தகராறு செய்து தாக்கினர்.
இதில் ராம்குமார் 40, சிவா 35, பழனிச்சாமி, முனியப்பன் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இவர்களுள் ராம்குமார், சிவா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிக்காளிபட்டி ஊர்மக்கள் அளித்த புகாரில் வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
