/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்த 6 கிராம மக்கள்
/
திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்த 6 கிராம மக்கள்
திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்த 6 கிராம மக்கள்
திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்த 6 கிராம மக்கள்
ADDED : ஜன 07, 2025 12:27 AM

திண்டுக்கல்; திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து குரும்பபட்டி உள்ளிட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.
திண்டுக்கல் நகராட்சி 2014 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பிறகு மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்படவில்லை. சமீபத்தில் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள குரும்பபட்டி, பள்ளப்பட்டி, சிலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், செட்டி நாயக்கன்பட்டி, அடியனுாத்து, தோட்டனுாத்து, முள்ளிப்பாடி ஆகிய கிராம ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அடியனுாத்து ஊராட்சிக்குட்பட்ட நாகப்பன்பட்டி, நல்லாம்பட்டி, வேடப்பட்டி, அந்தோணியார்நகர், வாழக்காய்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.
அவர்கள் கூறியதாவது : மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை கிடைக்காது. கிராமத்திற்கு ஒதுக்கப்படும் கலைஞர் வீடு கட்டும் திட்டம், விவசாய வேலைகள், ஆடு, மாடு, கோழி வளர்ப்புக்கான திட்டங்கள், கிராமத்திற்கு என ஒதுக்கப்படும் மத்திய, மாநில அரசு திட்டங்கள், கிராமசாலைகள், விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் போன்றவை ரத்தாகும். மாநகராட்சியுடன் இணைத்தால் அரசு வழங்கிய ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

