/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் 60 சதவீத உறுதிமொழிகள் நிறைவேற்றம் சட்டசபை குழு தலைவர் வேல்முருகன் தகவல்
/
திண்டுக்கல்லில் 60 சதவீத உறுதிமொழிகள் நிறைவேற்றம் சட்டசபை குழு தலைவர் வேல்முருகன் தகவல்
திண்டுக்கல்லில் 60 சதவீத உறுதிமொழிகள் நிறைவேற்றம் சட்டசபை குழு தலைவர் வேல்முருகன் தகவல்
திண்டுக்கல்லில் 60 சதவீத உறுதிமொழிகள் நிறைவேற்றம் சட்டசபை குழு தலைவர் வேல்முருகன் தகவல்
ADDED : செப் 28, 2024 04:36 AM
திண்டுக்கல், : ''திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 60 சதவீதம் வரை உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது''என தமிழ்நாடு சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் பேசினார்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்த்தில் 60 சதவீதம் வரை உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழநி முருகன் கோயிலில் ரூ.50 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி எளிதாக சுவாமி தரிசனம் செய்ய அளித்த கோரிக்கைகள், தரிசன வரிசை, பாதுகாப்பு, ரோப்கார் வசதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் அமைத்தல் உட்பட கோயில் தொடர்பான 32 உறுதிமொழிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடம் ரூ.20 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிட்டங்கியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.
கலெக்டர் பூங்கொடி, எம்.பி.,சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர். எஸ்.பி.,பிரதீப், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார்,கொடைக்கானல் வன அலுவலர் யோகேஸ்குமார் மீனா,குழு உறுப்பினர்கள் அரவிந்த்ரமேஷ், அருள், நல்லதம்பி, மாங்குடி, மோகன், ஜெயக்குமார், பேரவை இணைச் செயலாளர் கருணாநிதி, சார்புச் செயலாளர் பியூலஜா,திண்டுக்கல் மேயர் இளமதி,மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன்,டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், ஆர்.டி.ஓ.,சக்திவேல் பங்கேற்றனர்.
பழநி கோயிலில் ஆய்வு
பழநி முருகன் கோயில் அன்னதான கூடத்தில் சட்டசபை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர். பழநி முருகன் கோயிலுக்கு வந்த சட்டசபை உறுதிமொழி ஏற்புக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் கோயிலில் ஆய்வில் ஈடுபட்டனர் இதில் அன்னதான கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையல் கூடத்தில் மேற்கொள்ளப்படும் சமையல் பணிகள் ,சமையல் கூடத்தின் சுகாதாரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அன்னதான கூடத்தில் உணவருந்திய பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இதன் பின் கலெக்டர் பூங்கொடி, கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, வருவாய்த்துறை, கோயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.